அஜித் பற்றி வைரலாக பரவிய வதந்தி- வைரலாக்கிய ரசிகர்களுக்கு உண்மையை கூறிய பிரபலம்
அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். இப்போது தன்னுடைய 60வது படத்திற்காக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் நடந்து வருகிறது. சமீபத்தில் அஜித்தை பற்றி ஒரு தகவல் வைரலாக பரவியது.
அதில் திரௌபதி படத்தை பார்த்த அஜித் அப்பட இயக்குனர் மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதாக தகவல் வந்தது.
தற்போது அஜித் என்னை அழைத்து பேசிவில்லை என்றும் அவருடன் நான் இருக்கும் புகைப்படம் 5 வருடத்திற்கு முன் ஒரு ரசிகனாக அவரை சந்தித்து எடுத்த புகைப்படம் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
வதந்திகளை நம்பாதீர்.. #திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே
— Mohan G 🔥 (@mohandreamer) January 13, 2020