தனுஷ் அடுத்தடுத்து படங்கள் நடித்து கலக்கி வருகிறார். அவரது படங்கள் என்றாலே தனியாக இப்போதெல்லாம் பேசப்படுகிறது.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாகப்போகும் படம் பட்டாஸ்.
இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் மாஸாக நடந்துள்ளது.
தற்போது இப்படத்தின் தமிழ்நாட்டின் திரையரங்க உரிமை மட்டும் ரூ. 17 கோடிக்கு விலைபோயுள்ளதாம்.