Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தை பார்க்க திரண்ட முக்கிய கூட்டம்! பிரம்மாண்ட ஏற்பாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் கடந்த ஜனவரி 9 ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி நல்ல முறையில் வசூல் வியாபாரம் செய்து வருகிறது.

நான்கு நாட்களில் இப்படம் ரூ 150 கோடி வசூலை தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின. இதனால் ரசிகர்களும் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் போலிசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக 400 பேருக்கு தர்பார் படத்தை பார்க்க அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

இதனால் போலிஸ்காரர்கள் குடும்பத்துடன் அம்மாவட்டத்தின் மானாமதுரை சீனியப்பா தியேட்டரில் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.