Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 65வது படம் இப்படிபட்ட கதையா?- இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா, வெளியான தகவல்

விஜய் தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வெற்றிகரமாக வலம் வருபவர்.

இப்போது இவர் தன்னுடைய 64வது படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கைதி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இவர் தீவிர கமல்ஹாசன் அவர்களின் ரசிகர் என்பதால் இப்படத்தில் அவரது தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 65வது படம் குறித்து சில தகவல் வருகிறது. அதாவது விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் கிராமிய கதைக்களத்தில் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் விஜய் யாரை தேர்வு செய்து எப்படிபட்ட படம் நடிக்க இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.