Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படம் பற்றி பேசினால் சம்பளம் கிடைக்காது, மாஸ்டர் பட நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடிக்கும் சில துணை நடிகர்கள் அவ்வப்போது தான் அளித்த பேட்டியில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஏற்ப்பட்ட அனுபவங்களை கூறினார்கள்.

இந்நிலையில் தற்போது வானம் கொட்டட்டும் படத்திற்காக நடிகர் சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ரம் பிரபு அண்மையில் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது சந்தனுவை பார்த்து அங்கிருந்த அனைத்து ரசிகர்களும் 'மாஸ்டர் மாஸ்டர்' என்று கோஷமிட துவங்கிவிட்டனர்.

அப்போது நடிகர் சாந்தனு மாஸ்டர் படம் பற்றி எதாவது கூறினால் எனக்கு பேமென்ட் (சம்பளம்) கட்டாகி விடும் என்று கூறினார்.

You May Like This Video :