Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூலை கடந்ததா! படத்தில் நடித்த பிரபலமே கூறிய தகவல்

தர்பார் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள படம். இப்படம் விமர்சன ரீதியாக சில நெகட்டிவ் கருத்துக்கள் வந்தாலும், வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது.

இந்நிலையில் தர்பார் படம் 4 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூலை கடந்துள்ளதாக இப்படத்தில் நடித்த வில்லன் சுனிஷ் ஷெட்டி கூறியுள்ளார்.

இதை இவர் ஒரு பாலிவுட் மீடியா ஒன்றில் தெரிவித்துள்ளார், ஆனால், இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதே இங்கு இருக்கும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் வேண்டுமென்றால் ரூ 100 கோடி வசூலை தர்பார் தமிழகத்தில் கடக்கும் என்று கூறலாம் என்றும் சில பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.