Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் வசூலில் 6 முறை ரஜினி மட்டுமே படைத்த சாதனை, அடுத்த இடத்தில் விஜய்

தமிழ் சினிமாவில் இன்றும் இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது ரஜினிகாந்த் தான். இவரின் படங்களுக்கு என்ன வரவேற்பு வரும் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தர்பார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நடத்தி வருகின்றது, அதிலும் தமிழகத்தில் நல்ல வசூல் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இதில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக நாம் தெரிவித்து இருந்தோம்.

இதன் மூலம் ரஜினி மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார், அது வேறு ஒன்றுமில்லை, எந்திரன், கபாலி, காலா, 2.0, பேட்ட என இதற்கு முன் 5 முறை ரூ 10 கோடி வசூலை சென்னையில் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

தற்போது தர்பார் மூலம் 6வது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார், இதற்கு அடுத்த இடத்தில் தெறி, மெர்சல், சர்கார், பிகில் என 4 முறை விஜய் இதை கடந்துள்ளார்.