Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம், இதனால் வாய்ப்பு போனதாம்

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் படையப்பா. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலம்பரி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார், இதற்கு பிறகு தான் இவரின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது.

இப்படத்தில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகை மீனாவை தான் கமிட் செய்தார்களாம், அதற்கும் முன்பு நக்மாவை கமிட் செய்யலாம் என்று பேசி பிறகு மீனாவிடம் சென்றார்களாம்.

ஆனால், நட்புக்காக படம் தெலுங்கில் எடுக்கும் போது மீனாவிடம் ஒரு வில்லத்தனம் வரவே இல்லையாம், மிகவும் அப்பாவியாகவே முகம் இருக்க, அவர் படையப்பாவில் இருந்து விலகினாராம்.