Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் வலிமை படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறாரா?- அவரே போட்ட டுவிட்

அஜித்தின் 60வது படம் மாஸாக தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்ததையடுத்து சென்னையில் நடக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கி பல நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடிகரின் லுக்கும் வெளியாகவில்லை, எந்த ஒரு புகைப்படமும் லீக் ஆக கூடாது என்பதில் படக்குழு தெளிவாகவுள்ளனர்.

படம் தொடங்கிவிட்டது ஆனால் இதுவரை படத்தின் நாயகி யார் என்பது தெரியவில்லை. பாலிவுட் நடிகைகளான யாமி கௌதம், ஹுமா குரேஷி, இலியானா போன்ற நாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் ஹுமா குரேஷி நேற்று டுவிட்டரில் உமாங் போலீஸ் அதிகாரி ஷோவில் இருந்திருக்க வேண்டும் ஆனால் சென்னையில் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன் என பதிவேற்றியுள்ளார்.

இதனால் அஜித்தின் 60வது பட நாயகி இவராக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.