Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிரைலர், டீஸர் என எதுவும் வெளியாகாமல் விஜய்யின் மாஸ்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா?- உண்மை தகவல்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர்.

மருத்துவ படிப்பின் அவசியம், பிரச்சனை குறித்து இப்படம் பேசப்படுகிறது என தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின.

அவ்வளவு தான் இன்னும் படத்தின் டிரைலர், டீஸர், பாடல்கள் என எதுவும் வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் வெளிநாட்டு உரிமம் மொத்தமும் விற்றுவிட்டதாம்.

டீஸர், டிரைலர் என எதுவும் வெளியாகாத நிலையில் படம் அமோகமாக வியாபாரம் ஆகிவிட்டதாக படத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.