Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுக்க தர்பார் படத்தின் வசூல்! தற்போதைய பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற மும்பை போலிஸ் அதிகாரியாக நடித்திருந்த தர்பார் படம் கடந்த ஜனவரி 9 ம் தேதி வெளியானது.

படத்தின் வெற்றியை சீர்குலைக்கும் வகையில் சில விஷமிகள் வேண்டுமென்றே இணையதளத்தில் படத்தை வெளியிட்டும், வசூலை குறைத்துக்கூறியும் வந்தனர்.

ஆனாலும் நல்ல விமர்சனங்களுடன் படம் நன்றாக ஓடியது. தற்போது வரை இந்தப்படம் 11 நாட்களில் உலகம் முழுக்க ரூ 181.5 கோடிகளை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் Highest South Indian Grosser என்ற லிஸ்டில் 15 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாம்.