Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் பிக்சர்ஸின் அடுத்தப்பிரமாண்ட படம் இந்த நடிகர் மற்றும் இயக்குனர் உடன் தானா?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதும் பிரமாண்ட படங்களை தான் தயாரிக்கும். கடந்த சில வருடத்தில் சர்கார், பேட்ட, காஞ்சனா3, நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள்.

தற்போது கூட ரஜினி-சிவா படத்தை தயாரித்து வருகின்றனர், இந்நிலையில் நாம் முன்பே ஆர்யா நடிப்பில் சுந்தர்.சி அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவுள்ளார் என்று தெரிவித்து இருந்தோம்.

அதில் ராஷிகண்ணா, ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தோம், தற்போது இப்படத்தில் காமெடியன்களாக விவேக், யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றது, உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.