Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு மெகா ஹிட் கொடுத்தும் மீண்டும் அஜித்துடன் இணையாதது ஏன்? பிரபல இயக்குனர் ஓபன் டாக்

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு வெற்றிக்காக போராடி வந்தார்.

அப்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த வில்லன், வரலாறு படமே ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.

இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது, இந்நிலையில் எப்போதும் ஹிட் கொடுத்த இயக்குனர்களுடன் நடிகர்கள் இணைவது யதார்த்தம் தான்.

ஆனால், அஜித் இதை தொடர்ந்து ரவிக்குமார் படத்தில் நடிக்கவே இல்லை, இதுக்குறித்து ரவிக்குமாரே கூறுகையில் ‘அவர் தான் எப்போதும் ஓகே சொல்ல வேண்டும்.

நான் சென்று நாம் ஒரு படம் செய்யலாமா? என கேட்க முடியாது, அதே நேரத்தில் அஜித்துடன் இன்று வரை நன்றாக பேசி வருகின்றேன், சில தினங்களுக்கு முன்பு கூட அவருடன் சுமார் 2 மணி நேரம் பேசி வந்தேன்’ என கூறியுள்ளார்