Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு படத்திற்காக இணையும் 8 இசையமைப்பாளர்கள், அதிகாரப்பூர்வமான தகவல்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வரும் வெளிவர காத்திருக்கும் படம் தான் தாராள பிரபு. ஹிந்தியில் அயூஷ்மானி குரானா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான விக்கீ டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.

இப்படத்தை தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்காக முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Screen Scene தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது.