Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தர்பார் ரசிகர்களிடம் பொங்கல் வரை நல்ல பரபரப்பை ஏற்படுத்த, தற்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாம்.

பல இடங்களில் 20% கூட கூட்டம் வரவில்லை என கூறப்படுகின்றது. அப்படியிருக்க ஒரு பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்றில் தர்பார் படம் ரூ 9 கோடி வரை தமிழகத்தில் நஷ்டத்தை சந்திக்கும் என கூறியுள்ளனர்.

சுமார் ரூ 63 கோடிக்கு இப்படத்தை வாங்கியவர்களுக்கு ரூ 9 கோடி வரை நஷ்டம் என அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.