Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2வது வாரத்தில் தனுஷின் பட்டாஸ் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா?- மாஸ் வெற்றி

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ்.

தமிழர்களின் ஒரு பாரம்பரிய கலையை பற்றி பேசியிருக்கும் இப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருந்தன.

இதுவரை தமிழ்நாட்டில் படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.

முதல் வாரத்தில் இப்படம் 350 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.