Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பில் சண்டை- இதுதான் விஷயம்

விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, சென்னை என அடுத்தடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதற்கு நடுவில் படக்குழுவினர் படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டுவிட்டனர். ரசிகர்களும் அடுத்தடுத்து ஸ்பெஷல் தினத்தில் மாஸ்டர் லுக்குகள் வந்ததால் படு குஷியில் உள்ளனர்.

அந்த ஃபஸ்ட் லுக்குகளையும் டிரண்ட் செய்து அசத்திவிட்டனர். தற்போது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்கிறதாம்.

பிப்ரவரி 1 முதல் 10ம் தேதி வரை அங்கு உள்ள நிலக்கரி சுரங்க பாதையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதில் படத்தில் முக்கியமாக இடம்பெறும் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறும் சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.