Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் பட கிளைமேக்ஸ் காட்சி குறித்து வந்த சூப்பர் தகவல்- தாறுமாறு தான்

லோகேஷ் கனகராஜ் கைதி படம் மூலம் தான் எப்படிபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டார்.

அப்படம் வெற்றியடைந்த கையோடு அவருக்கு இளைய தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. தளபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் அவர் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

படத்திற்கான பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது நாம் ஏற்கெனவே படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு நெய்வேலி செல்கிறார்கள் என்று கூறியிருந்தோம்.

அங்கு விஜய்-விஜய் சேதுபதி இடையேயான முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். அதுதான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என்கின்றனர்.