Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பா.பாண்டி 2 வில் நடிக்கவிருக்கும் கவுண்டமணி..? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

தமிழில் திருடா திருடி, பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. இவர் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார்.

மேலும் தற்போது 'வெள்ளை யானை' எனும் படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அப்போது நடிகர் பற்றின சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

அவர் கூறியது "நடிகர் தனுஷ் தீவிரமான கவுண்டமணி ரசிகன். கவுண்டமணி அண்ணனை பற்றி என்ன கேட்டாலும் சரியா கூறிவிடுவார்.

மேலும் பா.பாண்டி 2 வில் ராஜ்கிரண் அவர்களையும் கவுண்டமணி அண்ணனையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசை" என சுப்பிரமணியம் சிவா கூறியுள்ளார்.