Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமர்க்களம் படம் ரிலீஸ் அன்று மட்டும் இத்தனை ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டதா?- பிரபலம் வெளியிட்ட தகவல்

அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு படம் அமர்க்களம். ஏன் இந்த படத்தை தலயால் கூட மறக்க முடியாது என்று கூறலாம்.

சினிமா பயணம் சூடு பிடிக்கவும், சொந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த படம் பெரிய உதவியாக இருந்தது. இப்படத்தை இயக்கிய சரண் அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவாரா என்பது தெரியவில்லை.

அண்மையில் இவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, அமர்க்களம் படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் தமிழ்நாட்டில் 25000 ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டது.

இது பெரிய விஷயம் என இயக்குனர் கூறியுள்ளார். 21 வருடத்திற்கு முன்பு ஒரு மன்றத்திற்கு 20 பேர் என்று கணக்கு வைத்தாலும் லட்ச கணக்கில் ரசிகர்கள் தலக்கு அப்போதே இருந்துள்ளனர்.