அஜித்தின் வலிமை படம் அவரது நடிப்பில் வெளியாக போகும் 60வது படம். 50வது படமான மங்காத்தா படத்தில் மாஸ் காட்டிய அஜித் இதில் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதிலும் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஆனால் மற்றபடி எந்த விவரமும் வெளியாகவில்லை. ஏன் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் கூட எதுவும் சரியாக வரவில்லை.
இந்த நேரத்தில் தான் இப்பட வில்லன் பற்றி நிறைய டாக் இருக்கிறது. புதிதாக வரும் தகவல் என்னவென்றால் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்பட வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.