மாஸ்டர் படத்தில் குட்டி கதை பாடலை விஜய் பாடியிருக்காரு, எழுதியது யார் தெரியுமா?
விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது.
இடையில் விஜய்க்கு வந்த வருமான வரி சோதனை, அவர் வெளியிட்ட செல்பி என ரசிகர்கள் பரபரப்பாக பேசினார்கள். படப்பிடிப்பு நெய்வேலியில் முடிந்துவிட்டது, அடுத்து எங்கே, எப்போது படப்பிடிப்பு என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் தான் காதலர் தின ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் இடம்பெறும் குட்டி கதை பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
பாடலை விஜய் அவர்கள் தான் பாடியுள்ளார் என்று அனிருத் அறிவித்துவிட்டார், பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியிருப்பதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.