Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோ படத்தை நீ இத்தனை தடவை பார்த்தீயா, அப்போ நீ? மிஷ்கின் விளாசல்

மிஷ்கின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி வருபவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் சைக்கோ படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படமும் ஹிட் அடித்தது. இந்நிலையில் மிஷ்கின் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கடுமையாக தன் படத்தையே கலாய்த்து பேசியுள்ளார்.

இதில் குறிப்பாக ஒருவர் தன்னிடம் வந்து ‘சார் நான் சைக்கோ படத்தை 4 தடவை பார்த்தேன்’ என்று சொன்னால், நான் உடனே திட்டிவிடுவேன்.

உனக்கு வேலையில்லை அதனால் பார்த்திருப்பாய், அந்த படம் இத்தனை தடவை பார்த்தால் இன்னும் சைக்கோ தான் ஆவாய் என்று கூறினேன் என கூறி மேடையை கலகலப்பாக்கியுள்ளார்.