விஜய் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் திரைக்கு வந்து தோல்வியடைந்த படம் மின்சார கண்ணா. இப்படத்தில் விஜய் ஹீரோயின் வீட்டிற்குள் வரவர நிறைய பொய் சொல்வார்.
பிறகு தன் குடும்பத்தினர் அனைவரையும் அந்த வீட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார், இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற PARASITE படத்தில் வறுமைக்காக இப்படித்தான் ஒரு குடும்பம் பொய் சொல்லி பெரிய குடும்பம் ஒன்றில் வேலைக்கு வருவார்கள்.
இந்த இரண்டு படங்களை வைத்து நிறைய மீம்ஸ் வந்தது, இதுக்குறித்து கே.எஸ்.ரவிகுமார் ‘நான் இன்னும் PARASITE படம் பார்க்கவில்லை.
ஆனால், ஆஸ்கர் விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தின் கதையை 20 வருடத்திற்கு முன்பே இயக்கியது சந்தோஷம், விஜய்க்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது’ என கூறியுள்ளார்.