Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகை- இப்படி ஒரு வேடமா?

தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு பிரம்மாண்ட படம் என்றால் அது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் தான்.

நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது, இதில் ஜெயம் ரவி, கார்த்தியின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்க இப்போது ஹைதராபாத்தில் படக்குழு பாதி பேர் இடம்பெற ஷுட்டிங் நடக்கிறதாம்.

அண்மையில் ஷோபிதா துலிபாலா என்ற நடிகை இணைந்துள்ளார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான இவர் அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கும் லக்‌ஷ்மி பாம்ப் படத்திலும் நடித்து வருகிறார். இவர் பொன்னியின் செல்வனில் இளவரசி கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.