Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் முதல் நாள் தமிழக வசூல்- சிவகார்த்திகேயன் படத்தை முந்தியதா?

இளம் இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி-ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் காதலர் தின ஸ்பெஷலாக வெளியான படம் நான் சிரித்தால்.

ராணாவே இயக்கியிருந்த குறும்படமான கெக்க பெக்க கெக்க பெக்கவை தான் அவர் படமாக இயக்கியுள்ளார்.

அதிகம் காமெடி கலந்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு ஹிப்ஹாப் ஆதியின் முந்தைய இரண்டு படங்கள் அளவிற்கு இல்லை என்றும் ஒரு கருத்து இருந்து வருகின்றது.

முதல் நாளில் சென்னையில் இப்படம் ரூ. 38 லட்சம் வசூலித்திருந்தது. இதை நாம் காலையிலேயே சினிஉலகம் தளத்தில் கூரியிருந்தோம்.

தற்போது தமிழ்நாட்டில் படம் முதல் நாள் முடிவில் ரூ. 3.46 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு சிவகார்த்திகேயனின் ஹீரோ தமிழகத்தில் முதல் நாள் ரூ 3.20 கோடி வசூல் செய்துள்ளது.

அதை வைத்து பார்க்கையில் ஹீரோவை விட தமிழகத்தில் நான் சிரித்தால் படம் அதிகம் வசூல் என்பதே உண்மை.

loading...