Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஸ்கார் வென்ற Parasite படத்தின் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு? இது தான் காரணமா

சமீபத்தில் வெளிவந்த ஆஸ்கார் வென்ற படம் Parasite. இப்படம் கொரியன் மொழியில் எடுக்க பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் இப்படம் தமிழ் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று சில தகவல் பரவி வந்தது.

இதனை குறித்து மின்சார கண்ணா படத்தின் இய்குனார் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது ' இப்படிப்பட்ட ஒரு படத்தை நான் அப்போது எடுத்து மிக பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசிய போது "இந்த பிரச்சனை வெளிநாட்டு விவகாரம் என்பதினால் இதற்கு அதற்குரிய வழக்கறிஞரை வைத்து தான் பேசவேண்டும். மேலும் இதனை குறித்து எனது முடிவை விரைவில் நான் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தை குறித்து பி. எல். தேனப்பன் அவர்கள் வழக்கு தொடர வுள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்து வருகிறது.

loading...