Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தின் அப்டேட் இந்த நாளில் வருகிறதா? இணையத்தில் கசிந்த தகவல்

வலிமை தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பில் உள்ளது.

மேலும், அஜித் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது, அதோடு வலிமை படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் வலிமை படத்தை பற்றி தற்போது வரை எந்த ஒரு அப்டேட்ஸும் வரவில்லை, இதனால் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.

தற்போது சமூக வலைத்தளத்தில் வரும் வெள்ளிக்கிழமை வலிமை படத்தின அப்டேட் வருவதாக கூறப்படுகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் வேகமாக பரவி வருகின்றது.

மேலும், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தான் முதலில் வரும் என கூறப்படுகின்றது. அதோடு கூடுதல் சிறப்பாக யுவனும் வலிமை படத்தின் இசைக்கோர்ப்பு வேலையில் இருந்து வருகின்றாராம்.

எது எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் என்று வந்தால் போதும் என்ற நிலையில் தான் உள்ளனர்.