Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி இது தான் நம்ம ரூட்டு, சிவகார்த்திகேயன் டாகடர், அயலான் இப்படித்தான் இருக்குமாம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது.

அதே நேரத்தில் நம்ம வீட்டு பிள்ளை மெகா ஹிட் ஆனது, இதற்கு காரணம் சிவகார்த்திகேயனுக்கு உள்ள பேமிலி ஆடியன்ஸ் தான்.

இதை மனதில் வைத்தே தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றதாம், அதிலும் அயலான் செம்ம காமெடியாக வந்துள்ளதாம்.

ஆம், டாக்டர், அயலான் இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு கைவந்த கலையான காமெடி காட்சிகள் பொறிப்பறக்குமாம், இதனால் அவரும் புகுந்து விளையாடியுள்ளாராம்.

சிவகார்த்திகேயன் இனி கொஞ்ச நாட்களுக்கு சீரியஸ் கதாபாத்திரத்திற்கு எல்லாம் கேப் விடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

இதன் காரணமாகவே இப்படி காமெடியும், கமர்ஷியல் மசாலா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அதோடு அயலான் படம் 5 மொழிகளில் ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

சிவகார்த்திகேயன் இதை முடித்துவிட்டு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.