Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்சாரில் சிக்கிய திரௌபதி திரைப்படம், இத்தனை காட்சிகள் நீக்கப்பட்டதா?

மோகன். ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் திரௌபதி. இப்படத்தின் ட்ரைலரில் இடம் பெற்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இப்படத்தின் ரீலீசிற்கு தடையாக வந்து நின்றதை நாம் அறிவோம்.

ஏனென்றால் இப்படம் ஒரு தனிப்பட்ட அமைப்பை தாக்குவது போல் இருப்பதாக இப்படத்தின் மீது அந்த அமைப்பு புகார் அளித்திருந்தது. இதனால் மீண்டும் இப்படத்தை சென்சார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் நேற்று நடந்து முடிந்துள்ளது. நடிகை கௌதமி உள்ளிட்ட 9 தணிக்கை குழுவினர் இப்படத்தை பார்த்தார்கள். படத்தை பார்த்து முடித்த பிறகு 14 இடத்தில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகளில் எல்லாம் முயூட் செய்ய வேண்டும் எனவும் தணிக்கை குழு உத்தரவுயிட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் இடம் பெரும் மூன்று ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு கட் கொடுத்தாகவும் தெரிவந்துள்ளது. இதன் குறித்து சொல்லவேண்டும் என்றால் படத்தில் ஒருவர் பேசும் காட்சியில் "அடக்குனா அடங்க கூடாதுனு அண்ணன் சொல்லிருக்காரு" என்ற வசனத்தை கூட கட் செய்ய கூறியுள்ளதாம் தணிக்கை குழு.

இதனையடுத்து இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வரும் 28ஆம் தேதி திரையிட போவதாக தெரியவந்துள்ளது.