Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூக்குத்தி அம்மன் சாமி படம் கிடையாது.. வெளிப்படையாக கூறிய படத்தின் முக்கிய பிரபலம்

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜ. சரவணன் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கூட இப்படத்தை குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது, கோடை விடுமுறையில் அருள் பாலிக்க வருகிறாள் அம்மன் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்த வரும் நடிகை ஸ்மிருதி அண்மையில் அளித்த பேட்டியில் "நான் பணியாரியத்தில் மூக்குத்தி அம்மன் படம் ஒரு சிறந்த பட குழு. நீங்கள் நினைப்பது போல் இப்படம் ஒன்றும் அம்மன் படம் கிடையாது. இது ஒரு நகைச்சுவையான படம்" என்று கூறினார்.

மேலும் பேசிய இவர் "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிகவும் சிறந்த நடிகை, படப்பிடிப்பு தளத்திற்கு நேரத்துடன் வந்து விடுவார். அவர் பணிபுரியும் விதத்தில் யாராலும் குறை சொல்ல முடியாது" என்று வெளிப்படையாக கூறினார்.

loading...