Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்தின் பிரமாண்ட திட்டம், மீண்டும் அந்த ரூட்டை எடுக்கின்றார், ரசிகர்கள் கொண்டாட்டம்

சந்தானம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர். ஆனால், இவர் ஹீரோ ஆசையில் காமெடியனாக நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.

ஹீரோவாக நடித்த ஒரு சில படங்களும் ஹிட் அடித்தது, ஆனால், கடைசியாக இவர் நடித்த டகால்டி படம் படுதோல்வியை சந்திதது.

அதை தொடர்ந்து இனி மாஸ் ஹீரோ கதையெல்லாம் வேண்டாம் என கதைக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

அந்த வகையில் சந்தானம் தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக சினிமா பிரபலம் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கலாம் என சந்தானம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பு பணியில் சந்தானம் தற்போது இருப்பதாக கூறப்படுகின்றது, கண்டிப்பாக இப்படமும் காமெடி கலாட்டா என கலக்கலாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்களுக்கு இந்த பாகமும் விருந்தாக இருக்கும் என தெரிகின்றது.

loading...