Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர் இதில் இருந்து காப்பியா? புகைப்படத்துடன் இதோ

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடித்து முடித்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

இப்படத்தை சசிகாந்த் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான Y Not ஸ்டுடியோஸ் இப்படத்தை தயரித்துள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் உரிமைகளை எந்தெந்த நிறுவங்கள் கைப்பற்றியுள்ளது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் Y Not ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்திருந்தது.

மேலும் அண்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்திருந்தது. இதில் தனுஷ் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தெரிந்தார். அதில் ஒரு போஸ்டரில் தனுஷ் அமர்ந்து அவருக்கு முன் இருக்கும் டேபிளில் உணவு இருப்பதுபோல் தெரியும்.

இந்நிலையில் இதே காட்சி இயேசு அவர்கள் தி லாஸ்ட் சப்பர் என்ற தனது இறுதி இரவு உணவின் புகைப்படம் போல் உள்ளது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...

loading...