Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் Opening சீன் இப்படி தான் இருக்கும், மாஸ்டர் பட நடிகர் கூறிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் இவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

சமீபத்தில் தளபதி விஜய் அவர்களின் குரலில் பாடி வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியகிள் மட்டுமல்லாமல் பல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது.

இந்நிலையில் விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கும் வி.ஜே. விஷால் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். இதில் பேசிய இவர் "விஜய் அவர்கள் மிகவும் தன்மையான ஒரு நடிகர். அவருடன் இந்த படத்தில் நான் நடித்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறன். இப்படத்தில் அவருடன் அறிமுக சீனில் நான் வருவேன். அந்த அறிமுக காட்சியில் விஜய் அவர்களை என்னை கூப்பிட்டு கலாய்க்க வேண்டும். அது தான் முதல் ஷாட்" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

loading...