Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேசியவர்களுக்கு பதிலடி, தர்பார் உண்மை நிலவரம் இப்படி இருக்கிறதே!

தர்பார் படம் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் வெற்றியா தோல்வியா என்று பல கேள்விகள் இன்றும் இருந்து வருகின்றது.

அப்படியிருக்க தர்பார் படம் எங்களுக்கு நஷ்டம் என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கினார்கள்.

அதை தொடர்ந்து ரஜினி, முருகதாஸ், லைகா என அனைவரையும் விநியோகஸ்தர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஆனால், இங்கு இப்படியிருக்க தர்பார் படம் திருச்சியில் மீண்டும் ரீரிலிஸ் ஆகியுள்ளது, அதுவும் 4 காட்சிகள்.

தர்பார் தமிழகத்தில் இன்றும் சில திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு தான் உள்ளாதாம், அதோடு ஒரு சில திரையரங்குகள் 50வது நாள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

loading...