Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினியை தொடர்ந்து அஜித் படத்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம், தல 61?

தமிழ் சினிமாவின் மிக பெரிய தூண்கள் என்றால் அது ரஜினி,கமல், அஜித், விஜய் தான். இவர்களில் ரஜினி, அஜித், விஜய்யின் சில ரசிகர்கள் தான் சமூக வலைதள பக்கங்களில் யார் பெரிய நடிகர் என்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இதற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தது.

மேலும் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் 61ஆம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாயரிக்க போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து பார்ப்போம்.