Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுப்பேட்டை 2 ரெடி? செல்வராகவன் போட்ட டுவிட், செம்ம மாஸான தகவல்

தமிழ் திரையுலக இய்குணர்களில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் என்றால் அது கண்டிப்பாக செல்வராகவன் தான்.

இவர் நடிகர் தனுஷை வைத்து தமிழ் சினிமாவிற்கு பல நல்ல படங்களை கொடுத்துள்ளார். அதிலும் எளித்தளவில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் அது புதுப்பேட்டை படமாக தான் இருக்கும்.

மேலும் இப்படத்தின் 2 ஆம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் "Go all guns blazing during writing the film. Because the movie is totally made there" என பதிவிட்டு படத்தின் அறிவிப்பை சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக புதுப்பேட்டை 2 தான் என்று கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.