Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகை, அவரே கூறிய தகவல்

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தை குறித்து சில தகவல்களை போனி கபூர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

இப்படத்தில் உமா குரேஷி, நவதீப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவதாக சில தகவல்கள் கசிந்து வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் தேன்மொழி தொடரில் நடித்து வரும் நடிகை ஸ்டெஃபி அண்மையில் அளித்த பேட்டியில் "நான் அஜித் அவர்களின் தீவிர ரசிகை, அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் வலிமை படத்தில் தற்போது நான் நடிக்க போகிறேன். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நான் இணைய உள்ளான்" என்று வெளிப்படையாக கூறினார்.