Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் அடுத்தப்படத்தில் இந்த முன்னணி நடிகர் நடிக்கின்றாரா? இது தான் உண்மை தகவல்

சிம்பு படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. தற்போது பல சர்ச்சைகளை தாண்டி தற்போது சிம்புவின் மாநாடு தொடங்கியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகவேகமாக நடந்து வருகின்றது, அடுத்து ஐதராபாத் செல்லும் இப்படத்தின் படப்பிடிப்பு என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிம்பு வெங்கட்பிரபுவை தொடர்ந்து சேரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தது.

அதோடு கூடுதலாக அப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கின்றார் என்ற செய்தியும் வந்தது பலருக்கும் ஷாக்.

ஆனால், விசாரிக்கையில் சிம்பு சேரனிடம் ஒரு லைன் கேட்டது உண்மை தானாம்.

இதனை அப்படியே திரைக்கதையாக சொல்லுங்கள் என்று தான் கூறியுள்ளாராம், அதற்குள் எல்லோரும் விஜய் சேதுபதி வில்லன் என்று கிளப்பிவிட்டுள்ளனர். அதனால், அந்த செய்தியில் உண்மையில்லை என்பதே தற்போதைய நிலவரம்.