Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரிலிஸில் திடீர் திருப்பம், ரசிகர்களை வருத்தப்பட வைத்த செய்தி

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க முக்கிய காரணம் லோகேஷும் கூட.

இவரின் கைதி படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இந்நிலையில் மாஸ்டர் பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

இதை தொடர்ந்து படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடியவுள்ளதாக நேற்றே நம் தளத்தில் கூறியிருந்தோம்.

தற்போது ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்டர் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆம், மாஸ்டர் சொன்ன தேதியில் கொண்டு வருமா என்ற நிலை உருவாகியுள்ளது.

அதனால், மே மாதல் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியது விஜய் ரசிகர்களிடம் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.