Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி ஸ்டோரி பாடல் மாஸ்டர் படத்தில் எப்படியிருக்கும் தெரியுமா? படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் என்ன சொன்னாலும் அதை பின் தொடர பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் அடுத்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது, இப்படத்தை தொடர்ந்து இவர் சுதா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது, இந்த பாடல் எடுக்கும் போது அங்கு வில்லன் நடிகர் தீனாவும் இருந்தாராம்.

அவர் கூறுகையில் ‘மாஸ்டர் படம் செம்ம தரமா இருக்கும், அதுவும் குட்டி ஸ்டோரி பாடல் வருகின்ற இடம் சும்மா பட்டையை கிளப்பும்.

அதோடு விஜய் அண்ணாவின் மூமண்ட்ஸ் கண்டிப்பாக ரசிக்க வைக்கும், அதை பார்க்கும் போதே அவ்வளவு சூப்பராக் ஐருந்தது’ என தீனா கூறியுள்ளார்.