Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிப்ஸி படத்திற்கு முதல் முறையாக வெளிவந்த விமர்சனம், இதோ

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜிப்ஸி. இப்படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் நடிகை நட்டாஷா சிங் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசரும் சரி இன்று வெளிவந்த இப்படத்தின் 2 நிமிட காட்சியும் சரி சர்ச்சைக்கு உட்பட்டதாக தான் இருக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தை அம்பேத் குமார் என்பவர் தயாரித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மனம் கொத்திப் பறவை படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்த வாரம் 6ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சியை தமிழகத்தின் திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு இவர் கூறியது " சரியான நேரத்தில் சரியான ஒரு படம்" என்று தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.