Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

D43 குறித்து ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல், இதோ

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 90% சதவீதம் வரை நடித்து முடித்திருக்கும் படம் கர்ணன்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடிக்கவிருக்கும் படம் Atrangi Re. இப்படத்தில் தான் நடிகர் அக்ஷய் குமாருடன் தனுஷ் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் D43. சமீபத்தில் தான் இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்திருந்து.

மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் 2 பாடல்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் "2 tunes locked for #D43 ... and somebody exciting is going to write the lyrics" என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் தற்போது இப்பாடல்களுக்கு யார் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.