இயக்குனர் ராஜூ முருகன் மக்களின் மீது புகுத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டு காட்டும்படியாக ஏற்கனவே ஜோக்கர் படத்தை எடுத்து சர்ச்சைகளுக்கிடையிலும் தேசிய விருது பெற்று சாதனை படைத்துவிட்டார்.
கடந்த வாரம் அவரின் இயக்கத்தில் வெளியான ஜிப்சி படமும் சில சோதனைக சோதனைகளுக்கிடையில் காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது.
ஆனாலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. வசலும் நல்ல முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
இதில் அவர் "மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.
உடன் இயக்குனர் ராஜூ முருகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜீவா, கௌதம் மேனன் ஆகியோர் இருக்கிறார்கள்.
"மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்'' @ikamalhaasan பாராட்டு#KamalHaasan #Gypsy @Dir_Rajumurugan @JiivaOfficial pic.twitter.com/wx5zaDM721
— Diamond Babu (@idiamondbabu) March 8, 2020