Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடித்து நொறுக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வசூல், இரண்டாவது வாரத்தில் கொட்டிய கோடிகள், முழு விவரம்

துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங்கு இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இல்லை.

ஆனால், முதல் நாளே படத்தின் விமர்சனம் பாசிட்டிவ்-ஆக வர, படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர், தமிழகம் முழுவதும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.

இப்படம் முதல் நாளை விட, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் பல கோடிகள் அதிகரிக்க தொடங்கியது.

தற்போது இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 2 கோடி வசூலை கடந்துள்ளது, அதோடு தமிழகத்தில் இப்படம் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

உலகம் முழுவதுமே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு நல்ல வசூல் வந்துள்ளதாம்.

கண்டிப்பாக இப்படம் ரூ 25 கோடிகள் வரை வசூல் செய்தாலும் ஆச்சரியம் இல்லை என்பதே தற்போது பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு.

மேலும், துல்கர் சல்மானுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது, அதனால், அவர் இன்னும் உற்சாகத்தில் உள்ளார்.