Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தின் தற்போதைய நிலை என்ன, வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தில் பாலிவுட் நடிகையாக ஹூமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்தது.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லங்கள் என்றும் அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்தது.

ஆனால், இதுவரை இந்த விஷயங்களை குறித்து தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இப்படத்தின் முதல் மற்றும் இராண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வரை நடந்து முடிந்ததாகவும், 65 சதவீதம் வரை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பிறகாக படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட இப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பைக் ஸ்டண்ட் காட்சிகளின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.