Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தலை தொடர்ந்து துல்கரின் அடுத்த தமிழ் படம், பிரபலம் இயக்குனர் ஆகின்றார், யார் தெரியுமா?

துல்கர் சல்மான் தமிழில் நடித்த ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழில் நடிக்க துல்கர் முடிவு செய்துள்ளார்.

அதற்காக இவர் தேர்ந்தெடுத்திருப்பது டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவை தான், ஆம், மாஸ்டர் பிருந்தா தற்போது இயக்குனர் அவதாராம் எடுத்துள்ளார்.

இப்படத்திற்கு ஹே சினாமிகா என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார்.

இவருடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க, கண்டிப்பாக இந்த படமும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

துல்கர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றியால் தற்போது செம்ம சந்தோஷத்தில் உள்ளார், இது இவரின் 25வது படமும் கூட.

அதன் காரணமாகவே தொடர்ந்து தமிழில் இவர் கவனம் செலுத்தி வருவது போல் தெரிகின்றது.