Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகவா லாரன்ஸின் அடுத்தப்படம், முன்னனி இசையமைப்பாளருடன் கைக்கோர்கின்றார்

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர். அப்படியே மெல்ல ஒரு சில படங்களில் நடித்து தற்போது வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என கலக்கி வருகின்றார்.

இவர் அடுத்து 5 ஸ்டார் கதிரேஷன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளாராம்.

ஜிவி, லாரன்ஸ் முதன் முதலாக சினிமாவில் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன் முறையாம்.

மேலும், லாரன்ஸ் தற்போது காஞ்சனா2 ஹிந்தி ரீமேக்-ஆன லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

இப்படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர், இப்படம் முடிந்த கையோடு இதன் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜிவி-யும் தற்போது சூரரைப் போற்று, வாடிவாசல் பிறகு ஒரு விஜய் படம் என செம்ம பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.