Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாராள பிரபு படத்தை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி, அதுவும் இத்தனை கோடிக்கா!

தாராள பிரபு பாலிவுட்டில் வந்த விக்கி டோனார் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்துள்ளனர். இப்படம் நாளை உலகம் முழுவதும் வரவுள்ளது.

இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணுக்கு ஏற்கனவே பியார் பிரேமா காதல் படம் நல்ல திருப்பத்தை தந்தது, அதை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் கொஞ்சம் சறுக்கல் என்றாலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது தாராள பிரபு படம் வெளிவர, இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தை விஜய் டிவி சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது, அதுவும் ரூ 2.25 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.