Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரானாவால் நடிகர் கார்த்திக்கு ஏற்பட்ட சோதனை, அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தயாரிப்பாளர்

நாடு முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் ஒரு விஷயம் கொரானா வைரஸ்.

இதனால் வெளிநாடுகளில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.

இதற்காக அந்தந்த நாடுகள் மக்களை எச்சரிக்கும் விதமாக பல விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆம் கைபேசி மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொரானா வைரஸ் தமிழ் திரையுலகையும் பாதித்துள்ளது என்று தான் கூறவேண்டும். ஆம் இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் நின்றுள்ளது என்று தகவல்கள் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, விக்ரமின் கோப்ரா உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் நின்றுள்ளது என்று தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனாவினால் கார்த்தியின் 'சுல்தான்' படத்தின் அப்டேட் தாமதமாகியுள்ளது மற்றும் பாதுகாப்பாக இருங்க என்று இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.